விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் கூட்டுறவு மருந்தகம் திறந்து வைப்பு

விருத்தாசலம் அருகே மங்கலம் பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.;

Update: 2021-12-16 13:13 GMT

விருத்தாசலம் அருகே மங்கலம் பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை  அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு கூட்டுறவு மருந்தகத்தை சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். ஆர். ராதாகிருஷ்ணன்  குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து  நோயாளிகளுக்கு மருந்து பொருட்களை வழங்கினார்.பின்னர் கூட்டுறவு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள், பொது மக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News