புவனகிரி அருகே குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது
புவனகிரி அருகே தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு சுமார் 50 குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த கீழமணக்குடி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்பழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஒரு வயது முதல் 30 வயது வரையிலான அனைவருக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 குழந்தைகளுக்கு மாத்திரைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கிராம சுகாதார செவிலியர்கள்,பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.