விருத்தாசலம்: வேளாண் சட்டம் வாபசை வரவேற்று இனிப்பு வழங்கிய வழக்கறிஞர்கள்
3 வேளாண் சட்டம் வாபஸ் செய்யப்பட்டதை வரவேற்று விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 100 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில்,தற்பொழுது விவசாயிகள் தங்கள் போராட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், வேளாண் சட்டங்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நீதிமன்றம் முன் இன்று வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.