விருத்தாசலம் கச்சிபெருமாநத்தத்தில் அ.தி.மு.க.பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
விருத்தாசலம் அருகே கச்சி பெருமாநத்தம் கிராமத்தில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.;
விருத்தாசலம் அருகே அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தில் அ.தி.மு.க. பொன்விழா 50 ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் உத்தரவின் பேரில்,கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினருமான அருண்மொழிதேவன் வழிகாட்டுதல்படி,விருதாச்சலம் தெற்கு ஒன்றிய கழகத்தினுடைய செயலாளர் தம்பிதுரை, விருத்தாசலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கச்சிபெருமாநத்தம் கிளை செயலாளர் பாலு தலைமையில் எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கிளைநிர்வாகிகள்பழனிவேல்,வேல்முருகன்,பழனிவேல்,சாமிதுரை,செல்லவேல்,விக்னேஸ்வரன்,மற்றும் மகளிர் அணி சார்பில் அஞ்சலை,செல்வம்பாப்பாத்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.