நண்பேன்டா: காங்கிரஸ் வேட்பாளர் தோற்றதால் தற்கொலைக்கு முயன்ற அதிமுக நண்பர்

விருத்தாசலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோல்வியுற்றதால் தற்கொலைக்கு முயன்ற அதிமுக நண்பர்

Update: 2022-02-26 13:17 GMT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகுமார்

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற்றது, அதன்படி கடலூர் மாவட்டத்தில்  6 நகராட்சிகள்,  14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து கடந்த 22 வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில்  13வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நகர செயலாளர் ரஞ்சித் குமார் என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் ரஞ்சித்குமார் சுயச்சை வேட்பாளரிடம் தோல்வியுற்றதை தாங்க முடியாமல் அவரது உயிர் நண்பரான  ஆயியார்மடம் தெருவைச் சார்ந்தவரும், தீவிர அதிமுக தொண்டரான விஜயகுமார்  நேற்று முன் தினம் இரவு எலி பேஸ்ட் சாப்பிட்டு உள்ளார்.

விஜயகுமார் மயக்கநிலையில் தன் மனைவியிடம் தனது நண்பர் தேர்தலில் தோல்வியுற்றது தாங்காமல் தான் விஷமருந்தி விட்டதாக தெரிவித்தார் பின்னர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்த வேதனையில் வாக்கு சேகரித்த நண்பர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News