பழங்குடியினருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைக்கான சிறப்பு முகாம்
விருத்தாசலத்தில் பழங்குடி இன மக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் இன மக்களுக்கு புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார், பழங்குடி இன மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் பூங்குழலி, இளநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜதுரை, தனி வருவாய் ஆய்வாளர் செந்தமிழ்வளவன் மற்றும் வட்ட பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.