விருத்தாசலம்: கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக போலீசில் புகார்

விருத்தாசலம் அருகே கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக அதனை வளர்த்தவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

Update: 2022-01-25 10:40 GMT
கோழி மற்றும் இறந்த குஞ்சுகளுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த கதிர்காமன்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தில் வசித்து வருபவர்  கதிர்காமன். இவர்  தனது வீட்டில் ஆடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கதிர்காமன் வளர்த்த பிறந்து 10 நாட்கள் ஆன கோழிக்குஞ்சுகளை பக்கத்து வீட்டுக்காரர் விஷம் வைத்து கொன்றதாகவும், தாய் கோழிக்கு நீதி வேண்டியும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது கதிர்காமன் தாய் கோழியையும் இறந்து போன அதன் குஞ்சுகளையும் காவல் நிலைத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

Tags:    

Similar News