நெல்லிக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழா நெல்லிக்குப்பத்தில் கொண்டாடப்பட்டது

Update: 2021-06-03 12:00 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழா நெல்லிக்குப்பத்தில் கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்,  கருணாநிதியின் பிறந்த நாளை அதிக கூட்டங்கள் கூடாமல், எளிய முறையில் வீடுகளில் கொண்டாடுங்கள் என்று கூறியபடி நெல்லிக்குப்பம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் ப.மணிவண்ணன் தலைமையில் பல்வேறு வார்டு பகுதிகளில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக நகர திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின்  திருவுருவ படத்திற்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர். அதன்பின்னர் அண்ணா நகர் .திருகண்டேஸ்வரம் மற்றும் வாழப்பட்டு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கொரோனா காலம் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

Tags:    

Similar News