ஜெயலலிதா நினைவு நாள்: கடலூரில் அ.தி.மு.க. சார்பில் அன்னதானம்
கடலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மஞ்சக்குப்பம், பாதிரிக்குப்பம் பேருந்து நிலையம் நான்கு முனை சந்திப்பு என மூன்று இடங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமையில் ஆயிரம் பேருக்கு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்டத்தில் வார்டு வாரியாக ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை வைத்து அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.