கடலூர் மாவட்டத்தில் காலியாகிறதா தமாகா கூடாரம் ?
வாசனின் குடும்பத்திற்கு நெருக்கமான பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக வந்த செய்திகளை அடுத்து தமாகாவில் அதிர்ச்சி;
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த தமாகா நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கீரப்பாளையத்திலுளள தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இல்லத்தில் காங்கிரசில் சேர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசனின் குடும்பத்திற்கு நெருக்கமான பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாகவும், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெறும் எனவும் கூறப்படும் நிலையில் மீதி உள்ள தமாகாவினர் தடுமாற்றத்தில் உள்ளனர். இதனால் கடலூர் மாவட்ட த.மா.கா.வில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.