கம்யூனிஸ்ட் கட்சி வாக்கு சேகரிப்பு
வால்பாறை தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் வாக்குசேகரிப்பு;
வால்பாறை தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் போட்டியிடுகின்றார். இவர், நல்லகாத்து எஸ்டேட், தோணிமுடி எஸ்டேட், ஐய்யர்பாடி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். தேயிலை தோட்டத்திற்குள் நடந்தே சென்று தேயிலை பறிக்கும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், "அதிமுக ஆட்சியில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை. காட்டுயானை, காட்டு பன்றி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் தொழிலாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிமுக அரசு இவற்றை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றவர், திமுக ஆட்சியின்போது தான் வால்பாறைக்கு பேருந்து நிலையம், அரசு கல்லூரி கொண்டு வரப்பட்டதாக கூறினார்.