ஆழியார் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணைக்கு நீர்வரத்து 891 கனஅடியாக உள்ள நிலையில், 199 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.;
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர் கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 110.30 கன அடி உயர்ந்து உள்ளது. அணைக்கு நீர்வரத்து 891 கன அடியாக உள்ள நிலையில், 199 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து அணையிலிருந்து நீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் ஆழியார் அணை கரையோர உள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தண்டேரா போட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.