வால்பாறையில் திமுகவினர் இடையே மோதல்: தேர்தல் ஒத்திவைப்பு

வால்பாறை நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.;

Update: 2022-03-04 10:30 GMT

வால்பாறையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தேர்தலில் 21 வார்டுகளில் திமுக 19 வார்டுகளை கைப்பற்றியது. இதனையடுத்து திமுக தலைமையின் சார்பாக  10 ஆவது வார்டில் வெற்றி பெற்ற காமாட்சி கணேசன் நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நகராட்சியின் தலைவருக்கான மறைமுக தேர்தலில், அவருக்கு எதிராக 14 வார்டில் திமுக சார்பில், வெற்றி பெற்ற அழகு சுந்தரவள்ளி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் கலைந்து போகச் சொல்லிய போது காவல் துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் நடந்த மறைமுக தேர்தலில் அழகு சுந்தரவல்லி 12 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் காமாட்சி கணேசனின் ஆதரவாளர்கள் தேர்தல் நடதும் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் திமுக தலைவர் அறிவித்த வேட்பாளருக்கு நகராட்சி தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்று சப்தமிட்டனர். இதன் காரணமாக வால்பாறை நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

Tags:    

Similar News