வால்பாறையில் குவியும் சுற்றுலாபயணிகள்
தமிழ்புத்தாண்டை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.;
தமிழகத்தின் சமவெளிப்பகுதியில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலாபயணிகள்
தமிழ்புத்தாண்டை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கம், நீராறு அணை, சோலையாறு அணை, நல்லமுடி காட்சிமுனை மற்றும் பாலாஜி கோவில் என அனைத்து பகுதியிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்த தால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகள் மே மாத இறுதிக்குள் அனுமதி பெற வேண்டும் என சுற்றுலாத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வால்பாறையில் சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல வசதியாக 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. வால்பாறை நகர், ரொட்டிக் கடை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. தனியார் தேயிலை தோட்டப்பகுதிகளில் தனியார் ரிசார்டுகளும் உள்ளன. இதில் பல தங்கும் விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது சுற்றுலாத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி கூறுகையில், வால்பாறையில் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் சுற்றுலாத்துறையில் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நகராட்சியில் மட்டும் அனுமதி வாங்கினால் போதாது. சுற்றுலாத்துறையிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும். மே மாதம் இறுதிக்குள் தங்கும் விடுதி மற்றும் ரிசார்ட் நடத்தி வருபவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.