பள்ளி மாணவி கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருமணமானதை மறைத்த ராமகிருஷ்ணன், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்திச் சென்றுள்ளார்.
கோவை நாகராஜபுரம் வெள்ளியங்கிரி வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (26). ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் தனது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனிடையே அவரது நண்பர் வீட்டருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் ராமகிருஷ்ணனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் ஏற்கனவே திருமணமானதை மறைத்த ராமகிருஷ்ணன், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்திச் சென்றுள்ளார்.
மாணவி மாயமானதை அடுத்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக சாய்பாபாகாலனி காவல் நிலையம் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் மாணவியை தேடி வந்தனர். ராமகிருஷ்ணனின் நண்பர்களின் அலைபேசி எண்ணை ஆய்வு செய்த போலீசார் ராமகிருஷ்ணன் மாணவியுடம், ஈரோடு பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தொடர்ந்து போலீசார் ஈரோட்டிற்கு விரைந்தனர். மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ராமகிருஷ்ணனை கைது செய்த போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். மேலும் ராமகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.