வ.உ.சி. உயிரியல் பூங்காவில் இருந்த 5 கட மான்கள் வனப்பகுதியில் விடுவிப்பு

Coimbatore News- வ.உ.சி. உயிரியல் பூங்காவில் இருந்த 5 கட மான்கள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.;

Update: 2024-07-04 13:00 GMT

Coimbatore News- கடமான்களை வனப்பகுதியில் விடுவிக்க கொண்டு சென்ற அதிகாரிகள்

Coimbatore News, Coimbatore News Today- இயற்கை சூழலின்மை, கட்டமைப்பு வசதியில் குறைபாடு காரணமாக கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்து, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு பராமரிக்கப்பட்டு வந்த மான்கள், பாம்புகள் போன்ற விலங்குகள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 26 புள்ளி மான்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக பூங்காவில் உள்ள கட மான் மாற்றம் செய்ய திட்டமிட்டது. கடமான்களை பரிசோதனை செய்ததில் காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு, கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இவைகளை வனப் பகுதிக்கு மாற்றம் செய்திட ஏதுவாக கோவை மாநகராட்சி மினி லாரி வாகனத்தில் வனத்துறை மூலம் கூண்டு கட்டமைக்கப்பட்டது.

கோவை மாவட்ட வன அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் போலுவம்பட்டி வன பணியாளர்கள், கோவை வனமண்டல வன கால்நடை அலுவலர் கோவை வ உ சி வன உயிரியல் பூங்கா இயக்குனர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் கோவை மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் இன்று 5 கட மான்கள் பிரத்தியேக கூண்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, சிறுவாணி மலை அடிவார வனப் பகுதியில் நல்ல முறையில் விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட கடமான்கள் தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News