ஸ்மார்ட் சிட்டி திட்ட சுவர் இடிந்து விழுந்த சம்பவம் - பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் ஆய்வு

நேற்று முன்தினம் பெய்த கன மழையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருந்த 12 அடி சுற்று சுவர் இடிந்து விழுந்தது;

Update: 2021-04-16 07:15 GMT

சுவர் இடிந்த இடத்தில் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டார்

கோவையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையில் கரும்புக்கடை பகுதி சேரன் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருந்த 12 அடி சுற்று சுவர் இடிந்து விழுந்தது.  அதனை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டாமுத்தூர் தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த சுற்றுச்சுவர் 6 மாத காலமே ஆன நிலையில் மழையில் பழுதடைந்து விழுந்து உள்ளது. தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையர், ஸ்மார்ட்சிட்டி அதிகாரிகள் மற்றும் இந்த வேலையினை எடுத்து இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் உடைய தலைமையில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் வரை இந்தப் பணிகள் தொடரக்கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார்.

மிகப்பெரிய பொருட்செலவில் கட்டப்பட்ட இந்த தரமற்ற சுற்றுச்சுவரை மத்திய அரசாங்க அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் அழைத்து வந்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிற்கு தர வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News