நான் போட்டியிடுவதாக நினைத்து வாக்களிக்க வேண்டும் : எஸ்.பி.வேலுமணி..!

வேட்பாளர்கள் பொள்ளாச்சி தொகுதி கார்த்திகேயன், கோவை தொகுதி சிங்கை ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

Update: 2024-04-03 01:30 GMT

வேலுமணி வாக்கு சேகரிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் வடமாநில மக்களை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளாருமான எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது அந்த அமைப்பினர் தங்கள் ஆதரவை தெரிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ராஜஸ்தானிய பாரம்பரிய தலைப்பாகை அணிந்து கொண்டு அவர்களிடம் பேசிய வேலுமணி, அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பொள்ளாச்சி தொகுதி கார்த்திகேயன், கோவை தொகுதி சிங்கை ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

பின்னர் பேசிய எஸ்.பி.வேலுமணி, நான் உங்களில் ஒருவன் எப்பொழுது வேண்டுமானாலும் நான் இங்கு வரலாம், கோவையிலும், பொள்ளாச்சியிலும் நான்தான் வேட்பாளர் என்று நினைத்து எனக்கு முழு ஆதரவையும் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியிலும் உங்களுக்கு அனைத்து விதத்திலும் பாதுகாப்பு அரணாக இருந்தது அதிமுகதான் என தெரிவித்த அவர், தற்போது மூன்றாண்டுகள் திமுக ஆட்சியில் நீங்கள் எந்த அளவிற்கு கஷ்ட்டபடுகிறீர்கள் என்று தெரியும் எனவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் ஆறு கல்லூரிகள் கொண்டுவந்தோம், தடையில்லாத குடிநீர் கொண்டுந்ததும் அதிமுகதான் என தெரிவித்த அவர், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் களத்தில் அதிமுக, திமுகவிற்கும்தான் போட்டி, நீங்கள் உங்கள் வாக்குகளை மாற்றினால் அது திமுக வெற்றிபெற ஏதுவாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கொரானா காலத்தில் கோவை மாவட்டம் முழுவதும் உணவுகளும், அத்தியாவசிய பொருட்களையும் அனைவருக்கும் வீடு,வீடாக வந்து கொடுத்துள்ளோம் எனவும், இன்று திமுக ஆட்சியில் எங்கு பார்தாலும் கஞ்சா விற்றுகொண்டு இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார். நமது வேட்பாளர்கள் சிங்கை ராமச்சந்திரனும், கார்த்திகேயனும், உங்களின் பிள்ளைகள், எப்பொழுது அழைத்தாலும் உடனே வந்து நிற்பார்கள் எனவும், அனைவரும் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும், திருப்பூரில் உள்ள உங்களின் உறவினர்களையும் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்துங்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News