கோவையில் பாஜக - திமுக மோதல் - படம் பிடித்த செய்தியாளர் மீது தாக்குதல்

கோவையில் பணம் பட்டுவாடா விவகாரத்தில் பா.ஜ.க - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை படம் பிடித்த செய்தியாளர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக செய்திளாளர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.

Update: 2021-04-01 05:00 GMT

கோவை தெலுங்குபாளையம் அருகே காரில் வந்த நபர் சிலர் வாக்களர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்களை கொண்ட சீட்டுடன் பணம் பட்டுவாடா செய்ய வந்ததாக வந்த தகவலை அடுத்து,

அங்கு சென்ற திமுகவினர் காரை சிறைபிடித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு காரை பறிமுதல் செய்து பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது வட்டாச்சியர் அலுவலகத்தில் தொண்டாமுத்தூர் தேர்தல் அலுவலர் செந்தில் அரசன் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் காரை சோதனையிட்டனர்.

அப்போது புகார் அளித்த திமுக நிர்வாகிகள் முன்னிலையில் சோதனை செய்ய வேண்டும் என திமுக வழக்கறிஞர் உள்ளே வந்த போது, தேர்தல் பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த கார் உரிமையாளர் திமுக வினருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது-

இதையடுத்து, புகார் தாரர் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் காரை சோதனையிட்டு உள்ளே இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனார். இதையடுத்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் பேரூர் வட்டாசியர் அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர் யார் புகார் அளித்தது என கேட்டு போலிஸ் மற்றும் தேர்தல் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வளாகத்திற்கு வெளியே வந்து திமுக வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் செய்தி சேகரிக்க வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை திமுக நிர்வாகிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவர் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.

Tags:    

Similar News