பேரூர் கோவிலில் வழிபாடு செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

Coimbatore News- கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.;

Update: 2024-01-17 02:45 GMT

Coimbatore News- ரசிகர்கள் உடன் நடிகர் சிவகார்த்திகேயன்

Coimbatore News, Coimbatore News Today- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம், குழந்தைகள் மற்றும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் வசூல் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. அயலான் திரைப்படம் தமிழகம் முழுவதும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஊராக நேரில் அயலான் பட குழுவினருடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் சென்று பார்வையிட்டு வருகிறார். அதன்படி கோவை வந்த அவர், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அந்த கோவிலில் சிவகார்த்திகேயன் வழிபாடு நடத்தினார். அப்போது அவருடன் பட குழுவினரும் கோவிலுக்கு வந்திருந்தனர். கோவிலில் வழிபட்ட பின்னர் வெளியில் வந்த அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். சிவகார்த்திகேயனை நேரில் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிவகார்த்திகேயன் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் சிவகார்த்திகேயனுடன் கைகுலுக்கி பொதுமக்கள் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் கார் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் திருப்பூர் புறப்பட்டு சென்றனர். இந்த காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயலான் திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News