விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 16வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-01-25 10:15 GMT

முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பிய விசைத்தறி உரிமையாளர்கள்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 16வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்ணயம் செய்த கூலி உயர்வை தர மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று அந்தந்த பகுதியில் இருந்து தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பிய விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பிரச்சினையில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் ஐவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து கூட்டு கமிட்டி கூடி ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும் விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News