கோவையில் கொரோனா தடுப்புப்பணிகள் எப்படி? அமைச்சர் பெரியகருப்பன் விசிட்!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து, பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-10 01:10 GMT

கோவை மாவட்டம் கிட்டாம்பாளையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட. அமைச்சர் பெரியகருப்பன்.

கோவையில் அதிகளவில் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இப்பணிகளை அவ்வப்போது அமைச்சர்கள், உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். கிட்டாம்பாளையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கணியூர் ஊராட்சி அலுவலகத்தில், முன்களப்பணியாளர்கள் 400 பேருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை, அமைச்சர்  துவக்கி வைத்தார். முதற்கட்டமாக 25 பேருக்கு நிவாரணத்தை அமைச்சர் பெரியகருபாபன் வழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. ஆய்வு கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News