பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து கோவையில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, கோவையின் பல பகுதிகளில் இடதுசாரி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-06-29 11:59 GMT

பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து, சூலூரில் இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு வழிவகுக்கும் எரிபொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில், கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக, மூன்று நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று கோவை ஆவரம்பாளையம், குனியமுத்தூர், சுல்தான்பேட்டை, சின்னியம்பாளையம், காந்தி பார்க், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சூலூர் அருகே சுல்தான்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும், தடுப்பூசிகளை அதிகமாக ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News