கோவை அருகே 658 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை அருகே, காய்கறிகளுக்கு நடுமே மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்ததை குட்காவை போலீசார் கைப்பற்றினர்.

Update: 2021-06-23 11:44 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

கோவை மாவட்டம்,  சூலூர் நான்கு ரோடு அருகே காவல் துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட மினி டெம்போ ஒன்று சென்றுள்ளது. சந்தேகத்தின் பேரில், காவல்துறையினர், அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர்.

இதனைக் கண்ட டெம்போ ஓட்டுனர்,  இந்திரா நகர் என்ற இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். வாகனத்தில் இருந்த மற்றொருவர் தப்பியோட முயற்சிக்கும் போது, போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முல்லா ராம் என்பது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்காவை, கர்நாடகாவில் இருந்து  தமிழகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக,  காய்கறி மற்றும் டீத்தூள் பொருட்களுக்கு நடுவே, மூட்டை மூட்டையாக குட்காவை பதுக்கி வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. சுமார் 658 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News