கோவை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

கோவை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-09-06 04:30 GMT

இஎஸ்ஐ மருத்துவமனை ( பைல் படம்)

தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10,11,12 மாணவர்களுக்கு வகுப்புகள்  நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ரேண்டம் முறையில் கொரொனா சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பள்ளியை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சுல்த்தான் பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் 33 மாணவர்களுக்கு சோதனை செய்ததில் மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில் 3 மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் இன்று கொரொனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

தொற்று ஏற்பட்ட மாணவர்கள் 3 பேருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடதக்கது

Tags:    

Similar News