இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் - கோவை கலெக்டர் நடவடிக்கை

கோவையில், இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2021-07-12 16:00 GMT

மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முருகன்(38) என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல ஆலாந்துறை காவல் நிலைய சரகத்தில் ஆதாயக் கொலை வழக்கில் விராச்சாமி (47) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  முருகன் மற்றும் விராச்சாமி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரை செய்தார். இதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இரண்டு குற்றவாளிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி உத்தரவின்படி முருகன் மற்றும் வீராசாமி ஆகியோர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News