கோவை அழகுகலை நிபுணர் தற்கொலை வழக்கில் திருப்பம் : கள்ளக்காதலனுடன் இணைந்து கொள்ளை நாடகமாடியது அம்பலம்
கோவை அருகே, அழகுகலை நிபுணர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.;
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மனைவி கங்காதேவி. அழகு கலை நிபுணர். நேற்று முன் தினம் இரவு வரை, அவர் வீடு திரும்பவில்லை. கணவர் சீனிவாசன் அங்கு சென்று பார்த்தபோது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, அழகு நிலையத்திற்கு வந்த மூன்று நபர்கள், கங்காதேவியின் கை, கால்களை கட்டி வாயையும் துணியால் கட்டி அணிந்திருந்த, 19 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கணவன் -மனைவி இருவரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு இருக்கும் போதே, கங்காதேவி தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பியூட்டி பார்லரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக முத்துப்பாண்டி என்பவரை கைது செய்தனர். முத்துப்பாண்டிக்கும் கங்காதேவிக்கும் இடையே கள்ளதொடர்பு இருந்ததும், இருவரும் சேர்ந்து கொள்ளை நாடகமாடி இருப்பதும் தெரியவந்தது.
தன்னை மூவர் பலாத்காரம் செய்து விட்டதாக கணவரிடம் தெரிவித்த கங்கா தேவி, இதை கணவர் வெளியில் சொல்ல மாட்டார் என்று நினைத்துள்ளார். ஆனால், காவல் நிலையத்தில் கட்டாயம் புகார் கொடுத்து ஆக வேண்டும் என்று கணவர் கூறி, மனைவியையும் அழைத்து சென்று புகார் அளித்துள்ளார்.
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் விரைவில் சிக்கிக் கொள்வோம் என பயந்தகங்காதேவி, வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. மேலும் கங்காதேவியின் செல்போனில் இருந்து முத்துப்பாண்டியின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரிமாறிக் இருப்பதும், அடிக்கடி பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, ஊட்டியில் இருந்த முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.