அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் திமுகவில் இணைந்தார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கு அவர் செய்யும் பணிகள் திட்டங்கள் தன்னை கவர்ந்ததாக கருத்து;
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அப்பநாயக்கன்பட்டி அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக சாந்தி உள்ளார். இந்நிலையில் சாந்தியும், அவரது கணவரும் அதிமுக மாவட்ட பிரதிநிதியுமான ராஜேந்திரன் ஆகியோர் கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு, பொங்கலூர் பழனிச்சாமி சால்வை அணிவித்து வரவேற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கு அவர் செய்யும் பணிகள் திட்டங்கள் தன்னை கவர்ந்ததாகவும், தங்களின் ஊராட்சியில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்று தர முடியும், ஒரு மாற்றத்தை தர முடியும் என பேட்டியின் போது சாந்தி ராஜேந்திரன் தெரிவித்தார்.