சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வெற்றி

சிங்காநல்லூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், 10 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Update: 2021-05-03 08:15 GMT

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தொகுதி சிங்காநல்லூர் தொகுதி. இத்தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட நா.கார்த்திக் பின்னடைவை சந்தித்து வந்தார்.
வாக்கு எண்ணிக்கையில் இறுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் 10 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் 81 ஆயிரத்து 244 வாக்குகளும், திமுக வேட்பாளர் கார்த்திக் 70 ஆயிரத்து 390 வாக்குகளும் பெற்றனர்.

Tags:    

Similar News