எதிர்கட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்கலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி

எதிர்கட்சிகள் கலவரம் செய்தால் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

Update: 2022-02-21 11:00 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் நாளைய தினம் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை குறித்தான ஆலோசனைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எதிர்கட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர் கட்சி முயற்சிப்பதாகவும், கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். எதிர்கட்சிகள் கலவரம் செய்தால் நாம் பொறுமையாக இருக்க கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். இந்த தேர்தலில் அனைத்து இடங்களில் திமுக வெற்றி பெறும். எதிர்கட்சி நிர்வாகிகள் வாக்குசாவடி மையங்களுக்குள் சென்றுள்ளனர் என்றும் சட்டமன்ற உறுப்பினர் எந்த அடையாள அட்டையை வைத்து வாக்குசாவடிக்குள் செல்ல யார் அனுமதி கொடுத்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு ஆயிரக்கணக்கான நபர்களை கொண்டு வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு உள்ளதாகவும் கூறினார். எதிர்கட்சி போடுகின்ற கூட்டம் ரசியமாகவே நடைபெறுவதாகவும் தெரித்தார். கோவை மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்க பல்வேறு சிரமங்கள் இருந்ததாக கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், வாக்காளர்களின் முகவரி மாற்றங்களில் சில பிரச்சினைகள் இருந்ததால் பூத் சிலிப் தருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். தேர்தலின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குசாவடிக்குள் சென்றது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் நாளை வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற வேண்டும் என கூறினார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News