6-8 ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு முடிவு எடுக்கப்பட்டவில்லை: அன்பில் மகேஷ்

6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Update: 2021-09-23 10:15 GMT

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பள்ளி நிர்வாகிகள், கொரோனா காலத்தில் பள்ளிகள் நடத்துவதில் உள்ள சிக்கல்களை தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மேலும் கல்விதுறை நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து மேலும் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என கூறினார். கோவையில் தனியார் பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் திறக்க வேண்டும் என்றும் மாணவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இருப்பினும் பெற்றோர்களிடையே பயம் இருக்க தான் செய்கிறது என தெரிவித்தார். பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அதனை வெளியில் தெரிவிக்காமல் இருப்பது தவறு தான் என கூறிய அவர், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுமென கூறினார். மேலும் நீட் தேர்வு தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பு உயர்த்தப்பட்ட பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News