கொரோனா சிகிச்சை வசதிகளை அதிகரிக்க எஸ்.பி.வேலுமணி கோரிக்கை.!

ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி, ரெம்டெசிவிர் வசதிகளை அதிகரிக்க எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

Update: 2021-05-13 10:30 GMT

கொரோனாவிற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு தருவோம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை ஆவராம்பாளையம் சாலையில் உள்ள கோயமுத்தூர் தொழில்துறை கட்டமைப்பு சங்கத்தின் கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும் போது, "இரண்டாவது அலை தொற்று கடுமையாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கிய பிரச்சனையாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் படுக்கைகளை குறைக்க கூடாது. அவ்வாறு செய்தால் நிலைமை மோசமாகும். படுக்கை, தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன், உடல்கள் எரியூட்டுதல் ஆகிய வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். கொரோனாவிற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு தருவோம்" எனத் தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கை மனுவினை அமைச்சர்களிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Tags:    

Similar News