செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று: கோவை மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் சாமிநாதனுக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

Update: 2021-12-16 11:00 GMT

அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், செய்தித்துறை அமைச்சராகவும் மு.பெ.சாமிநாதன் பதவி வகித்து வருகிறார். கடந்த வாரத்தில் அமைச்சர் சாமிநாதன் சென்னை மற்றும் திருப்பூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் அமைச்சர் சாமிநாதனுக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனிடையே கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமைச்சர் சாமிநாதன் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News