கோவையில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு 3.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளி சென்ற மர்ம நபர்கள்
கோவையில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ 3.5 லட்சம் மதிப்புள்ள மது பானங்களை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை விமான நிலையம் பின்புறம் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை முழு ஊரடங்கு காரணமாக கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 27 ம் தேதி இரவு அக்கடையின் சுவரில் துளையிட்டும், முன் பக்க கதவின் பூட்டை உடைத்தும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மதுபானக் கடைக்குள் நுழைந்தனர்.
3 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் திருடி சென்றுள்ளனர். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து அக்கடையின் சூப்பர்வைரசர் சுகுமாரனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுகுமாறன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் பீளமேடு குற்றப் பிரிவு காவல்துறையினர் மதுபானக்கடையில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.