கோவையில் அலுமினிய குண்டு கொடுத்து தங்க நகை என கூறி நூதன முறையில் மோசடி

Update: 2022-05-30 16:49 GMT

நகை மோசடிக்கு ஆளான இந்திராணி.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ஆர்த்தி ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தி வருபவர் சரவணன் மற்றும் இந்திராணி தம்பதி. இந்திராணி கடந்த 24.2.22 அன்று கடையில் இருந்தபோது இரு இளைஞர்கள் ஒரு பெண் கடைக்கு வந்து உள்ளனர். கடையில் உள்ள இந்திராணியிடம் 3 மில்லி கிராம் தங்க நகையை கொடுத்து உள்ளனர்.   தங்களிடம் 2 கிலோ தங்கம் இருப்பதாகவும் அதனை ஒரு லட்சம் ரெடி செய்து கொள்ளுங்கள் நாங்க அதை கொடுத்து விடுகிறோம் என தெரிவித்துள்ளனர். இதனை உண்மை என நம்பி 26.2.22 அன்று இந்திராணி கடையில் தனியாக இருந்த நிலையில் அவர்கள் மீண்டும் அந்த  கடைக்கு வந்து அலுமினிய குண்டு 2 கிலோ அலுமினியம் செயின் கொடுத்து ஒரு லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு தலைமறைவாகினர்.

இதனையடுத்து இந்திராணி அருகில் உள்ள தங்க நகை கடைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அது தங்கம் இல்லை 2 கிலோ அலுமினிய குண்டு என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கோவை பந்தைய நிலைய காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப் பட்டு உள்ளது.  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 3 மில்லி கிராம் தங்க நகை, 2 கிலோ அலுமினியக் குண்டை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News