கோவை வளர்ச்சிக்காக ரூ. 200 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் பழுதாகி உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உடனடியாக சரி செய்யப்படும்.

Update: 2021-11-15 16:30 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரிடையாக சந்தித்து மனுக்களை பெற்று வருகின்றார். கடந்த 30 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் மனுக்களை நேரிடையாக அமைச்சரிடம் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம், உடையம்பாளையம், செளரிபாளையம், இராமநாதபுரம், சாரமேடு, வடகோவை உள்ளிட்ட 12 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் மனுக்கள் ஒரே நாளில் பெறப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளரகளிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில் இதுவரை 88 இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 64 ஆயிரம் மனுக்கள் பொதுமக்களிடம் வரப்பெற்றுள்ளது. கோவையில் பழுதடைந்த சாலைகள் திட்ட மதிப்பீடு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்பிறகு முதல்வரின் பார்வைக்கு எடுத்து சென்று மோசமான சாலைகள் புதுப்பிக்கப்படும். கோவையில் பழுதாகி உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உடனடியாக சரி செய்யப்படும். கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிக்காக 200 கோடி மதிப்பிலான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News