நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
பொள்ளாச்சி அருகே கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன;
மரக்கன்றுகள் நட்ட பொள்ளாச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் 12 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கிடையில் பொள்ளாச்சி-பல்லடம் ரோடு செங்குட்டைபாளையம் பிரிவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கோட்ட பொறியாளர் சரவண செல்வம் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து பாலக்காடு ரோடு ஜலத்தூர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 அடி உயர மரக்கன்றுகள் நடப்பட்டது.
விழாவில் உதவி கோட்ட பொறியாளர்கள் பாலமுருகன், கவுசல்யா, உதவி பொறியாளர்கள் தினேஷ்குமார், பிரகாஷ் மற்றும் சாலை ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஆனைமலை நெடுஞ்சாலைத்துறை சார்பில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஆனைமலை கோட்ட பகுதியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி-வால்பாறை சாலை, ஆனைமலை-சேத்துமடை சாலை, அம்பராம்பாளையம் மின்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.