பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி (109) காலமானார்

கோவையைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-09-28 05:36 GMT

பத்மஸ்ரீ விருதை வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி (109) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாப்பம்மாள் பாட்டி தனது 108 ஆண்டு கால வாழ்க்கையில் இயற்கை விவசாயத்தின் முன்னோடியாகவும், சமூக சேவையாளராகவும் திகழ்ந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

பாப்பம்மாள் திமுக முன்னோடி மற்றும் பெரியார் விருது பெற்றவர். 1965 முதல் நீட் தேர்வு எதிர்ப்பு வரை அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1959-ல் ஊராட்சி உறுப்பினராகத் தொடங்கி பல பொறுப்புகளை வகித்தவர். 45 ஆண்டுகள் வேளாண் பல்கலைக்கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராக செயல்பட்டவர். 2021-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும்" என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் இரங்கல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில்: இயற்கை விவசாயம் மற்றும் மக்கள் சேவையில் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தவர். அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்: திமுக தொடங்கிய காலத்திலேயே உறுப்பினரான மூத்த முன்னோடி 15 மாநில மாநாடுகளில் பங்கேற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் நீட் விலக்கு வரை அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். பாப்பம்மாள் பாட்டியின் அர்ப்பணிப்பு, போற்றுதலுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்

அவரது மறைவு தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது

Tags:    

Similar News