நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்: கோவை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.;

facebooktwitter-grey
Update: 2024-09-19 05:52 GMT
நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்: கோவை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு
  • whatsapp icon

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் தாக்கி இறந்தார். இதனை தொடர்ந்து கேரளாவையொட்டி தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழுவினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதனையடுத்து கோவை மாவட்டத்தின் காரமடை பகுதியில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.  கோபனாரி, முள்ளி பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. 

டாக்டர் பிரவீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா மற்றும் 2 நர்சுகள், ஒரு மருந்தாளுர் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் குழுவினர் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. வாகனங்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.  பாதிக்கப்பட்டவர்களின் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.  பொதுமக்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்படுகின்றன

நிபா வைரஸ் - அறிகுறிகள் மற்றும் பரவும் விதம்

• வவ்வால்களின் சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் மூலம் நேரடியாக பரவும்

• பாதிக்கப்பட்ட விலங்குகளின் தொடர்பு மூலமும் பரவலாம்

• பழங்களை நன்கு கழுவிய பின்னரே உண்ண வேண்டும்

பொதுமக்களுக்கான அறிவுரைகள்

1. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

2. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவும்

3. பொது இடங்களில் முகக்கவசம் அணியவும்

4. சமீபத்தில் கேரளா பயணம் மேற்கொண்டவர்கள் சுய கண்காணிப்பில் இருக்கவும்

தற்போது வரை தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என   கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி கூறியுள்ளார். மேலும் காய்ச்சல் பாதித்தவரின் பெயர், தொடர்பு எண் பெறப்பட்டு அவர்களை தினமும் தொடர்பு கொண்டு காய்ச்சல் உள்ளதா, அல்லது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்ற விவரங்கள் பெறப்படுகிறது. இதுவும் தவிர அவர்கள் சென்ற பகுதிகளிலும் சுகாதார மேற்பார்வையாளர் மூலம் ஆய்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தொடர்புக்கு

• 24/7 கட்டுப்பாட்டு அறை: 0422-2301114

• அவசர உதவி எண்: 104

Tags:    

Similar News