தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல், மருத்துவம் மற்றும் நறுமணப் பயிர்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பயிற்சி ஜனவரி 30, 31- ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.;

Update: 2024-01-29 05:28 GMT

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், ஐஸ்கீரிம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ், பிசிபெலாபாத் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், கீா் மிக்ஸ் ஆகியவை தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் பயிற்சியின் முதல் நாளன்று ரூ. 1,770 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சியானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் நறுமணப் பயிர்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி ஜனவரி 30, 31-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

இப்பயிற்சியில் உழவா்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், மகளிர், இறுதியாண்டு பட்டதாரி மாணவா்கள், பட்டதாரிகள், இளைஞா்கள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்கலாம்.

இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஜனவரி 30, 31- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணமாக நபருக்கு ரூ. 3,540 வசூலிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள, 99949-89417, 0422-6611310 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News