டாஸ்மாக் கடையில் திருடியவர் கைது

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச்சென்றனர்.;

Update: 2021-05-29 09:45 GMT

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காக்காபாளையம் பகுதியில் 1542 என்ற அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த 26ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச்சென்றனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அன்னூர் போலீசார் அவினாசி சாலையில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் காக்காபாளையம் டாஸ்மாக் கடையில் மதுபானம் திருடிய நபர்களில் ஒருவர் என்பதும் இவர் சூலுர் செங்கத்துறையை சார்ந்த சக்திவேல் என்பதும் தெரியவந்தது. மேலும் இவருடன் அதே பகுதியை சார்ந்த இளைஞர்கள் விக்னேஷ், ஆகாஷ், ஆகியோரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சக்திவேலை கைது செய்த போலீசார் தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News