தொடர் திருட்டு: ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
20 வழக்குகள் உள்ள நிலையில் ரவுடியாக வலம் வந்த சிட்டிபாபு கைது.;
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடைஆகிய பகுதிகளில் இரண்டு சக்கர வாகன திருட்டு மற்றும் பல்வேறு குற்ற பிண்ணனியுடன் ரவுடியாக வலம் வந்தவன் சிட்டிபாபு. இவன் மீது 20 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிறுமுகை காவல் துறையினர் சிட்டி பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிட்டிபாபுவை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் அடைக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு சிறுமுகை காவல் ஆய்வாளர் தவமணி பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் குண்டர் தடுப்பு காவலில் சிட்டிபாபுவை கைது செய்ய பரிந்துரை செய்தார். இதையெடுத்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி சிட்டிபாபுவை குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.