ஊட்டி,மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் - ஆட்சியர் தகவல்

ஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை 16-ம் தேதி முதல் ஒரு வழிபாதையாக மாற்றம்;

Update: 2022-04-14 08:39 GMT

ஊட்டியில் சீசன் துவங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை 16-ம் தேதி முதல் ஒரு வழிபாதையாக மாற்றம் - மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல்

ஊட்டியில் சீசன் துவங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை 16-ம் தேதி முதல் ஒரு வழிபாதையாக மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர், ஊட்டிக்கு வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதி. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும் இதர வாகனங்கள் குன்னூர் வழியாக அனுமதி. ஊட்டியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதி என கூறப்பட்டுள்ளது.

Similar News