கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கக்கோரி மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கக்கோரி மேட்டுப்பாளையத்தில் மக்கள் பாதுகாப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-07-06 07:00 GMT

கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கக் கோரி, மக்கள் பாதுகாப்பு குழு சார்பில் மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, நகர்நல மையத்தில் கொரானோ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏறத்தாழ, 60 ஆயிரம் மக்கள் வசிக்கும் மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு,  ஒரு வாரத்தில் 600 ஊசிகள் மட்டுமே போடப்படுகிறது. இதனால் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. 

இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதிக்கு தடுப்பூசியை கூடுதலாக வழங்கக்கோரி, மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு, கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைப்பெற்றது. மேட்டுப்பாளையம் மக்கள் பாதுகாப்பு குழு சார்பில்நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய மாநில அரசுகள் உடனடியாக மேட்டுப்பாளையம் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட வேண்டும், தடுப்பூசிக்காக மக்கள் விடிய விடிய காத்திருப்பதால் அந்தந்த பகுதிகளிலேயே தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News