சிறுமுகை வனப்பகுதியில் ஆண் புலி உயிரிழப்பு

புலி வயது முதிர்வு காரணமாக உயிரிழக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.;

Update: 2021-09-21 12:00 GMT

உயிரிழந்த புலி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அதிக அளவில் சிறுத்தை மற்றும் புலிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திகுட்டை சரக பகுதிகளில் சிறுமுகை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வராக மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனக்கால்நடை மருத்துவராகளால் இன்று புலியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. புலி வயது முதிர்வு காரணமாக உயிரிழக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News