கோவை வனப்பகுதியில் கூடுதலாக 1049.73 ஹெக்டேர் நிலம் சேர்ப்பு:கலெக்டர் நடவடிக்கை!

கோவை வனக்கோட்டம் 69000 ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 70049 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

Update: 2021-06-10 06:51 GMT

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனுக்கு புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் 69000 ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் வனத்தையொட்டிய பகுதிகள் அதிகமுள்ளன. இப்பகுதிகளை வனப்பகுதியுடன் இணைத்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வனப்பகுதியின் அளவு 1049 ஹெக்டேர் விரிவடைந்தது.

யானை வழித்தடமாக இருக்கும் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 50.79 ஹெக்டேர் நிலத்தை தனியார் வனமாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்திரவிட்டுள்ளார்.1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இப்பகுதி கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் மூலம் மாநிலத்தின் முதல் யானைகள் வழித்தடம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்தில் யானைகளின் வழித்தடத்தை மீட்டு நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் நாகராஜனுக்கு வனத்துறை ஊழியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கோவை வனக்கோட்டம் 69000 ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 70049 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனுக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புத்தகம் வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Tags:    

Similar News