பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

Update: 2023-02-17 11:01 GMT

காட்சி படம் 

இந்த ஆண்டு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஐந்து சிவாலயங்களில் சிவராத்திரியை சிறப்பு பூஜைகளுடன், விடியவிடிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாட இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

நாளை இரவு 9 மணி முதல் 11 மணி வரை முதற்கால பூஜை, 11 மணி முதல் ஒரு மணி வரை இரண்டாம் கால பூஜை. நள்ளிரவு ஒரு மணி முதல் 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் 4.30 நான்காம் கால பூஜை ஆகியன நடைபெற உள்ளது.

சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரூர் சாந்தலிங்க அடிகளார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு திருக்கோவில் நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசை, தவில் இசை, நாதஸ்வரம் இசைக்கப்படுகிறது.

மாலை 6.15மணிக்கு கோவை மாவட்ட திருக்கோவில் ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு குத்துவிளக்கேற்றி விழா தொடங்குகிறது.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாலச் அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோர் ஆன்மிக அருளுரை வழங்குகின்றனர்.

இரவு 7.15 மணிக்கு வழுவூர் பழனியப்பன் குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7.45 சிவகண வாத்திய குழுவினர் கயிலை வாத்தியமும் நடைபெற உள்ளது.

இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொறிவாளர் சுகி. சிவம் தலைமையில் பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் பெண்களா, ஆண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

இரவு 9.30 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் கானா உலகநாதன், தஞ்சை நாட்டுப்புற பாடகி செல்வி, டி.வி.சண்முகம் வழங்கும் கோவை பிரியா இசைக்குழு பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

இரவு 11.30 நண்பர்கள் கலைக்குழு ஸ்ரீதர் தலைமையில் வெங்கலம், பம்பை, காவடி, கைசிலம் பாட்ட கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரவு 12.30 மணிக்கு சென்னை சாய் நிருத்தியா லயா வழங்கும் அரனும் அங்கையர்கன்னியும் நாட்டிய நாடகம், அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சுசித்ரா குழுவின் பக்தி இன்னிசை, இரவு 2.30 மணிக்கு திருப்பூர் மூலனூர் சாந்தக்குமாரின் மின்னல் கிராமியக் கலைக் குழு பறை இசை, தீ விளையாட்டு,

அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை சூப்பர் சிங்கர் ராஜ கணபதி, சரத் சந்தோஷ், தீப்தி சுரேஷ், ஸ்ரீஷா பாட்டுக்கச்சேரி ஆகியன நடைபெற உள்ளது.

சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஹர்சினி, உதவி ஆணையர் விமலா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News