பட்டா மாறுதலுக்கு லஞ்சம் ; விஏஒ கைது

பட்டா மாறுதல் செய்து தர கிராம நிர்வாக அலுவலர் குமார், 3500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.;

Update: 2021-08-24 15:00 GMT

பைல் படம்.

கோவை மாவட்டம் இடிகரை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் பட்டா மாறுதல் வேண்டி, வெள்ளாணப்பட்டி பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பட்டா மாறுதல் செய்து தர கிராம நிர்வாக அலுவலர் குமார் (40) 3500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக பால்ராஜ் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் பால்ராஜ் புகார் அளித்துள்ளார். அவர்கள் அளித்த அறிவுரையின் படி வெள்ளாணப்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து குமாரிடம், பால்ராஜ் 3500 ரூபாய் மதிப்புள்ள ராசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் குமாரை கையும், களவுமாக கைது செய்தனர்.

Tags:    

Similar News