அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் ரெய்டுக்கு காரணம்: எஸ்.பி.வேலுமணி

திமுக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன் மீது பொய் வழக்கு தொடர்ந்து சோதனை நடத்தியதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.;

Update: 2021-08-14 12:45 GMT

எஸ்.பி.வேலுமணிக்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு.

கடந்த 10ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையைத் தொடர்ந்து முதல் முறையாக கோவைக்கு வந்த அவருக்கு, கோவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன் மீது பொய் வழக்கு தொடர்ந்து சோதனை நடத்தியதாக தெரிவித்தார். சோதனை நடைபெற்று கொண்டிருந்த போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அதனை சட்டரீதியாக நாளை சந்திப்போம் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி மக்கள் என்றென்றும் எங்கள் பக்கம் நிற்பார்கள் என்று கூறிய அவர் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நான் அமைச்சரான பிறகு ஐந்து ஆண்டுகளில் அளித்ததால் இந்த அளவுக்கு எனக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சோதனையின்போது 13 லட்சம் பிடிபட்டது, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது என்று கூறுவது தவறான செய்தி என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக கட்சி தொடர நான் முக்கியமான காரணம் என்பதால் திமுக தலைவருக்கு என் மீது கோபம் என அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்ட அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

Tags:    

Similar News