ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த சித்தா கோவிட் சிகிச்சை மையம் துவக்கம்

கோவிட் பெருந்தொற்றுக்கு சித்த மருத்துவ நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் நல்ல பலன் அளித்து வருகின்றன.

Update: 2021-06-09 15:38 GMT

சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறக்கப்பட்ட போது எடுத்த படம்

உலகையே உலுக்கி வரும் கோவிட் பெருந்தொற்றுக்கு சித்த மருத்துவ நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் நல்ல பலன் அளித்து வருகின்றன. இதையடுத்து, அரசு சார்பிலேயே சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையில் கொங்கன் சித்தர் மருத்துவமனை மற்றும் சாய்கிராம் ஆயுர்வேத மருத்துவமனை ஆகியவை இணைந்து ஆயுஷ் கோவிட் சிகிச்சை மையத்தை துவங்கியுள்ளனர்.

இதற்கான துவக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார். இந்த மையத்தில் ஆக்சிஜன் வசதி, படுக்கைகள், மருந்துகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைகள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுடன் இம்மையம் செயல்பட உள்ளதாகவும் அம்மையத்தகன் நிறுவனர்கள் தெரிவித்தனர்.



Tags:    

Similar News